நான் தன்னம்பிக்கை மிகுந்தவள்-சினேகா
கடந்த மாதம் ஆஸ்திரேலியாவிற்கு வருகை புரிந்த சினேகா அளித்த ப்ரத்யேகப் பேட்டி...
? தமிழ்த்திரை உலகில் காலடி பதித்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன.அதாவது,2001ம் ஆண்டு 'என்னவளே' படத்தின் மூலம் அறிமுகமானீர்கள்.இப்பொழுது 2011 ம் ஆண்டு இல்லையா? ஒரு தமிழ் பட உலகில் 10 ஆண்டுகள் தாக்குபிடிப்பது என்பது சாதனை..இப்படி தமிழ் பட உலகில் 10 ஆண்டுகளாக வெற்றி நடிகையாக தொடர்வதன் ரகசியம் பின்னனி அல்லது பலம் என எதை குறிப்பிடுவீர்கள்..?
நிறைய கஷ்டப்பட்டேன்.சொல்லனும்னா நான் ஒரு கிளாமரஸ் ஹீரோயினா இல்லாமல் இருப்பதே பெருமையான விஷயம்.இப்பெல்லாம் கிளாமரா இருப்பவர்களே 5,6 வருஷத்துக்குப் பிறகு எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை..எல்லோரும் சொல்வார்கள் அவங்க அஜீத்,விஜய்,சூர்யா கூட நடிக்கிறாங்க..அதற்குப் பிறகு காணாமல் போயிடுறாங்க. நான் ஹோம்லியா இந்த 10 ஆண்டுகள் நடிகையாக தொடர்வது பெரிய விஷயம்..சில ஆண்டுகளாக நான் படம் பண்ணலை..படம் எதுவும் இல்லையா?என கேட்பாங்க.. இப்பவும் நான் நாலு கதை கேட்கிறேன்.. எனக்கு எது பிடிக்குதோ அதை செய்றேன்.இப்பக்கூட சூர்யகிரன் சார் கதை சொல்லியிருக்கிறார்.திரைஉலகத்திலே நிறைய பிரச்சினைகள் இருக்கு..சும்மா வந்தேன்னு சொல்ல முடியாது..
? பொதுவாக திரைபடங்களில் வரும் கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள் ஒன்றி நடித்திருக்கிறார்கள் என்பார்கள்.அப்படி நீங்கள் நடித்த படங்களில்,நீங்கள் ஏற்ற கதாபாத்திரத்தில் உங்களை பாதித்த கதாபாத்திரம் எது..?
ஆட்டோகிராப், பிரிவோம் சந்திப்போம்..
ஆட்டோகிராப் படத்திற்கு முந்தைய சினேகா வேறு.,இப்போதைய சினேகா வேறு.தன்னம்பிக்கைன்னா என்ன என உணர்த்திய படம்.'ஒவ்வொரு பூக்களுமே'பாடலுக்குப் பிறகு நானே மாறிட்டேன்.படத்தில் வரும் கோமகன்,பெருமாள் அண்ணா என எல்லோரிடமும் பழகினேன் .புதுமையான அனுபவம் அது..கடவுள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறை வைத்திருக்கிறான்.நான் உயரமாக இல்லை என்பது என்னுடைய குறை.ஆனால் இருக்கிறதை வைத்து நிறைவாக வாழனும் என்பது கடவுளோட விருப்பம்.. இன்னொருப் படமான பிரிவோம் சந்திப்போம் படம் அமைதியை உள்வாங்கிய படம்..அந்த படத்திற்கு பிறகு வீட்டிலேயும் அமைதியாக இருக்க ஆரம்பிச்சேன்.அம்மாவே கேட்டாங்க..
? நீங்கள் கண்தானம் செய்திருப்பதாக செய்தி வந்தது,ஆட்டோகிராப் படத்திற்குப் பிறகு இந்த முடிவா?
கண்டிப்பாக இருக்கலாம்..இந்த வருடம் கிட்னிதானம் பண்ணலாம்னு இருக்கேன்..அது போக சின்ன சின்ன நற்பணிகள் செய்துகிட்டுதான் இருக்கேன்.
? எது வந்து உங்களை நற்பணிகள் செய்ய தூண்டியது...
எல்லாருக்கும் நல்லது நடக்கனும்னு..ஒரு ஸ்டார் சொன்னா மரியாதை இருக்கும்ல..அதற்கு முன்னோடியா நானே செய்றேன்..ஒரு ஸ்டார் சொன்னா மத்தவங்க பாலோ பண்ணுவாங்களே.,அதற்காகத்தான்..
? நீங்கள் யோகா செய்கிறீர்களாமே..?
சமீபத்தில் கோபம் அதிகமாக வந்துட்டு இருக்கு..பவர்யோகாவும் ஏரோபிக்ஸும் பண்றேன்.
? திரைஉலகினர் மீது பரப்பப்படும் கிசுகிசு பற்றி..,இதில் உங்கள் மனநிலை எப்படி..,
என்னை பற்றி எழுதாத விஷயங்களோ,பத்திரிகைகளோ கிடையாது..பொதுவாகவே எல்லாப் பத்திரிகைகாரங்களையும் நான் 'அண்ணா' என்றுதான். கூப்பிடுவேன்.அப்படி இருக்கும்பொழுது எழுதுறாங்க..சமீபத்தில் எனக்கு கல்யாணம் என்று எழுதினாங்க..இப்ப கிசுகிசுக்களை கண்டுக்கிறதில்லை..என் நியூஸ் போட்டு விற்ற பேப்பரில் கிடைக்கிற காசிலே சாப்பிடுறாங்கன்னா எனக்கு சந்தோஷம் தான்..
? தமிழ் திரைப்படங்களில் நடிகையாக நடிக்கனும்னா தமிழ் தெரிந்துக்கொள்ளக்கூடாது என்ற போக்கு நிலவுகிறதே..,
இந்த திரைஉலகத்தில் திறமைக்கும்,தமிழுக்கும் மரியாதை கிடையாது..அது,80களிலேயே முடிந்துவிட்டது.இப்ப வர்ற பொன்னுங்களுக்கு எவ்வளவு சின்னதாக குட்டைப் பாவாடை போடமுடியும்,சிவப்பாக இருக்கனும் என்பதுதான் அடையாளமே...
? நீங்க எப்படி நடிகையானீங்க..
எங்கப்பா துபாய் ஸ்டேடியத்தில் வேலைப் பார்த்திட்டு இருந்தபொழுது மம்முட்டி,மோகன் லால் கலந்துக்கிட்ட ஷோ நடந்தது.எதேச்சையாக என்னை பார்த்த பாசில் சாரும் நடிக்கலாமேன்னு கேட்டார்.கலா மாஸ்டர் சினிமா இருந்ததாலும்,வீட்டில் எல்லாருடைய சம்மதத்தின் பேரிலும் நடிக்க வந்துவிட்டேன்..முதல் படம் அனில் சார் படம்...
? தமிழ்நாட்டில் தமிழ் பேசுறது குறைவு..ஆனால் ஆஸ்திரேலிய நாட்டின் தமிழ் பற்றி குறிப்பிடுங்களேன்..
பொதுவாகவே தமிழ்நாட்டில் தமிழும்,ஆங்கிலமும் தெரியும்.. தமிழ் பேசுவது குறைவு...ஆனால் ஆங்கிலம் மட்டும் தெரிந்த ஆஸ்திரேலிய நாட்டில் முழுக்க தமிழ் பேசுவது ஆச்சர்யமே..இதற்காக இவங்களை பாராட்டுறேன்.. நன்றி!